இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரான்ஸ் நாட்டின் லகர்நோப் 93 மாநகரசபையின் உறுப்பினர் சுகுர்ணா மார்க்கண்டு அவர்களினால் கோமாரி,திருக்கோவில் மற்றும் பனங்காடு வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உதவிப் பொருட்களும் கோமாரி செல்வபுரம் துளசி வித்தியாலய மாணவர்களுக்குத் துணிப்பைகளும் வழங்கி வைப்பு.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட கோமாரி வைத்தியசாலை, திருக்கோவில் வைத்தியசாலை மற்றும் ஆலையடிவேம்பு பனங்காடு வைத்தியசாலை போன்றவற்றிற்குக் பெறுமதிமிக்க மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு (6) வைத்திய சாலை பொறுப்பு வைத்தியர்,மற்றும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டது.
அத்தோடு கோமாரி செல்வபுரம் துளசி வித்தியாலய மாணவர்களுக்கான டியூசன் வகுப்புகளுக்கு கொண்டு செல்லக்கூடிய துணிப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்களும் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சுபோதரன்,ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் புஸ்பராஜ்,மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன்,முருகேஸ் பிரகாஸ்,விதுசன்,டிசோக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
உதவிகளை வழங்கிய பிரான்ஸ் லகர்நோப் 93 மாநகரசபை உறுப்பினர் சுகுர்ணா மார்க்கண்டு அவர்களிடம் வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலை நிருவாகங்கள் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் பல உதவிக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதோடு அவை தொடர்பில் தன்னாலான உதவிகளை வழங்க முயற்சிப்பதாகவும் இப்பணிக்கு ஒத்துழைத்த வைத்தியசாலைகளுக்கான இணைப்பினை வழங்கிய இயன் மருத்துவர் ஹரன்ராஜ் அவர்களுக்கும் இப்பொருட்களை இங்கு வழங்குவதற்குக் காரணமான பிரான்ஸ் திரு. Rks.அருள்மொழிதேவன் திரு.நா.பாலச்சந்திரன் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் அவர்களுக்கும் பிரான்ஸ் லகர்நோப் 93 மாநகரசபை உறுப்பினர் சுகுர்ணா மார்க்கண்டு தனது நன்றிகளையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ந.குகதர்சன்



.jpeg)











