இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய பணிப்பாளராக ஷனொன் கௌலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று (09) கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பணியாற்றிய 13 ஆண்டுகள் உட்பட, ஷனொன் கௌலின் 26 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவம் கொண்ட ஒரு அதிகாரியாவார்.
வலுசக்தி, காலநிலை, சுற்றுச்சூழல், காற்றின் தரம், பொது சுகாதாரம் மற்றும் உணவு-நீர் ஆகிய துறைகளில் முதலீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் கொள்கை விடயங்களில் அவர் நிபுணத்துவம் பெற்றவர்.
அவர் 2023 ஆம் ஆண்டு முதல் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மங்கோலியாவுக்கான வதிவிடப் பிரதிநிதித்துவத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.





