இலங்கைக் குடியரசின் 78வது சுதந்திர தின வாழ்த்துச்செய்தி.




 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நட்பு நாடான இலங்கை குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். 

 இந்த தேசியத் திருநாள் இலங்கை குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது அந்நாட்டு மக்கள் தமது தேசிய இறையாண்மையை நிலைநாட்டவும், அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பாதையை பலப்படுத்தவும் மேற்கொண்ட சாதனைகளை பிரதிபலிக்கிறது. 

இந்தச் சந்தர்ப்பத்தில், எமது இரு நட்பு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வினால் இந்த உறவுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. எமது இரு நாடுகளினதும் மக்களினதும் பொதுவான நலன்களுக்காக இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் நான் எதிர்பார்க்கிறேன். 

இலங்கை குடியரசின் இந்த தேசிய கொண்டாட்டத்தில் நானும் இணைந்து கொள்வதுடன், இலங்கை குடியரசு தொடர்ந்தும் பாதுகாப்பாகவும், ஸ்திரத்தன்மையுடனும் விளங்கி, மேன்மேலும் முன்னேற்றத்தையும் சுபிட்சத்தையும் அடைய வேண்டுமென வாழ்த்துகிறேன். 

 
-- காலித் ஹமூத் அல்-கஹ்தானி
(இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்)