ஏடு முத்துவிழா அழைப்பு!!

தேவையுடையோர் கல்வி அபிவிருத்திக்கு கரம் கொடுக்கும் தொண்டு நிறுவனமான ஏடு அமைப்பின் முப்பதாம் அகவை நிறைவு விழா மட்டக்களப்பில் வெகு சிறப்பாக இடம் பெறவுள்ளது.

நாளை மறுதினம் 31.01.2026 திகதி சனிக்கிழமையன்று மு.ப 9.30 மணி மட்டக்களப்பு Y.M.C.A மண்டபத்தில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி, இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, தலைமையுரை, ஆவணப்படம் (VIDEO) வெளியீடு, முத்துவிழா மலர் அறிமுகமும் வெளியீடும் இடம்பெற்று  கருத்துரைகள் மற்றும் நன்றியுரையுடன், இடம் பெறவுள்ள நிகழ்வானது ஏடு உறுப்பினர்கள், நலன்பெறுநர், நலன்விரும்பிகள் ஆகியோரின் ஒன்றுகூடலாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.