“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி”
என்பது 2026 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத் தேசிய விழாவின் முக்கிய தொனிப்பொருளாகும். பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வெறும் ஆவணங்களாக மட்டுப்படுத்தாமல், நிஜ வாழ்க்கையில் யதார்த்தமாக்கி, நாட்டை முன்னோக்கிச் செல்வதில் பெண்களின் பங்களிப்பை வலியுறுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு தேசிய ரீதியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன .

இதற்கமைய மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் பெண் முயற்சியாளர்களின் உள்ளுர் உற்பத்தி கண்காட்சி நிகழ்வு செயலக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது .
உள்ளுர் உற்பத்தி கண்காட்சியில் கைத்தறி நெசவு ஆடைகள், கைப்பணி பொருட்கள், உள்ளூர் உணவு வகைகள். வீட்டு அலங்கார பொருட்கள் , உள்ளுர் மரக்கறி , பழ வகைகள் , பொதி செய்யப்பட்ட சிறு தானிய உணவு வகைகள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு உள்ளுர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்தனர் .