பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மட்டக்களப்பு மாவட்ட மருந்தக உரிமையாளர்கள் மற்றும் மருந்தாளர்களுக்கான செயலமர்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் .






















































“போதைப்பொருளிலிருந்து வெளியேறி, வாழ்க்கை எனும் ஒளிக்குள் அடியெடுத்து வையுங்கள்” என்ற கருப்பொருளில், இன்று (17.03.2026) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருந்தக உரிமையாளர்கள் மற்றும் மருந்தாளர்களுக்கான பயிற்சி, ஆலோசனை, கலந்துரையாடல் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள டாக்டர் சதுர்முகம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் ஒருங்கிணைத்ததுடன், Esoft Campus நிறுவனம் அனுசரணையாளராக இணைந்தது.
இதில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே. மோகனகுமார் அவர்கள் கலந்து கொண்டு, மருந்துகள் தொடர்பான சரியான பயன்பாடு மற்றும் பொது சுகாதார நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தார். மேலும் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்களான திரு. என். தேவனேசன் மற்றும் திரு. என். விமலசேகரன் ஆகியோர் பொருட்களின் தரம், பாதுகாப்பான கையாடல் மற்றும் நோயாளிகள், நுகர்வோருடன் பொறுப்புடன் நடந்து கொள்வது குறித்து உரையாற்றினர்.
நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மருந்தாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.