மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் வெபர் மைதானத்தில் இடம்பெற்றது
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை அணிவித்து பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு பாடசாலை சமூகத்தினரால் வரவேற்கப்பட்டனர்.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருமதி. எஸ். பிரபா
உதவி கல்விப் பணிப்பாளர் கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்லை,
சிறப்பு அதிதியாக வைத்தியர் எஸ். பிரணவன்
ஆலோசகர் பொது அறுவை சிகிச்சை நிபுணர் போதனா மருத்துவமனை, மட்டக்களப்பு ,
கௌரவ அதிதிகளாக திரு. டி. கோகுலகுமாரன் மட்டக்களப்பு கோட்டக் உதவி கல்வி பணிப்பாளர்,
திருமதி. அனுராதா சுதாகரன் சூரியா மகளிர் அபிவிருத்தி நிலைய முகாமைத்துவ ஒருங்கிணைப்பாளர் ,
திரு. வி. லவகுமார்
உதவி கல்விப் பணிப்பாளர் (Physical Edu) வலயக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .
அதிதிகள் வரவேற்பை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்ல கொடிகள் ஏற்றப்பட்டதோடு தேசிய கீதம் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டது.
விளையாட்டு நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு மாணவர்களின் சத்தியபிரமாண நிகழ்வுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
நிகழ்வில் வரவேற்பு நடனம் இல்லங்களின் அணிவகுப்பு , மாணவர்களின் உடற்பயிற்சி என்பன இடம் பெற்றன .
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அதிதிகளால் சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .
ஆசிரியர்கள் ,பழைய மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர் .
EDITER




