மட்டக்களப்பு சென் மேரிஸ் மொண்டசூரி பகல் நேர பராமரிப்பு நிலையம்/ பாலர் பாடசாலை, பூம்புகார் , மற்றும் புளியந்தீவு கிளை ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து நடத்திய வருடாந்த விளையாட்டுப்போட்டி -2026.03.07 அன்று பூம்புகார் நகர் சிட்டி லக்கி விளையாட்டு கிளப் மைதானத்தில் சென் மேரிஸ் பணிப்பாளர்
ராஜினி பிரான்சிஸ் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் மாலை இடம் பெற்றது.
பிரதம விருந்தினராக
கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியக தலைவர் M.A. அமீர்டீன் J.P. NDT கலந்து சிறப்பித்தார் மேலும் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தில் இருந்து வருகை தந்த பணி இயக்குனர் T. பத்மநாதன்(WORKING DIRECTER) , மலர் செல்வன் மற்றும் கௌரவ விருந்தினராக Rev.Fr.கிங்ஸ்லி ஜெயகாந்தன் அவர்களும் கலந்து கொண்டார்கள் .
ஆரம்ப நிகழ்வாக சிறார்களால் விருந்தினர்களுக்கு மலர் மாலை அணிவித்து பேண்ட் வாத்தியதுடன் வரவேற்கப்பட்டனர் .
விருந்தினர்களால் தேசிய கொடி ,மற்றும் பாடசாலை கொடி ஏற்றப்பட்டது .
தேசிய கீதம் , பாடசாலை கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து Rev.Fr.கிங்ஸ்லி ஜெயகாந்தன் அவர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து சிறுவர்களினால் ஒலிம்பிக் சுடரேற்றி மாணவர்களின் சத்தியபிரமாண நிகழ்வுடன் விளையாட்டுகள் ஆரம்பமானது .
சிறார்களின் உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை என பல்வேறு பட்ட விளையாட்டுக்கள் செல்லக்குதூகலமாக இடம்பெற்றது.
மாணவர்களின் விளையாட்டுகளை தொடர்ந்து, ஆசிரியர்கள், பெற்றோர்கள், விளையாட்டுகளும் இடம்பெற்றன.
பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென் மேரிஸ் பணிப்பாளர் ராஜினி பிரான்சிஸ் மற்றும் பிரதம விருந்தினர் M.A. அமீர்டீன் மற்றும் சிறப்பு சிறப்பு விருந்தினர் மலர் செல்வன் பத்மநாதன் மற்றும் சென் மேரிஸ் முன்பள்ளி முகாமையாளர் திருமதி கமலினி சூரிய குமாரன் அவர்களும் பரிசளித்து கௌரவித்தார்கள்




