மாவட்டச் செயலாளரின் பணிப்புரைக்கு அமையும் டிக்வா சூறாவளிக்கு பின்னர் நீர் ஆபத்து மற்றும் முகாமைத்துவம் தொடர்பான சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் பிரதேச மட்ட எதிர்கால திட்டங்களை ஆராய்தல் தொடர்பான கலந்துரையாடலானது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு உதவி பிரதேச செயலாளர் திரு கி. இளம் குமுதன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு வி. தவேந்திரன் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர், சுற்றாடல் திணைக்களம், கடற்தொழில் நீரியல் வழங்கல் திணைக்களம், கடல் சார் சூழல் அபிவிருத்தி அதிகார சபை, கமநல சேவைகள் திணைக்களம் போன்ற திணைக்களங்களை பிரதிபலிக்கும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் எதிர்கால திட்டங்களாக
காங்கேயனோடை தொடக்கம் கிரான்குளம் வரையான ஆற்றுப்பகுதியில் ஆற்று நீர் உட்புகாத வண்ணம் அமையப்பெற்ற தடுப்பு அணைச்சுவர் சேதமுற்று காணப்படுகின்றது அது தொடர்பான புனர் நிர்மாணத்தின் அவசியம் தொடர்பாக அனைவராலும் திட்டம் முன்மொழியப்பட்டது.
ஆரையம்பதி கிழக்கு தொடக்கம் வேடர் குடியிருப்பு வரை தூர்ந்து போய் உள்ள தோணாக்களை தூர்வாரி மழைநீர் தேங்கா வண்ணம் வடிகான் அமைப்பை சீர் செய்தல்.
அரசுக்கு சொந்தமான நீரேந்து பிரதேசங்களை அத்துமீறி ஆட்சி புரிகின்ற நபர்களுக்கு எதிராக உரிய திணைக்களங்களின் மூலம் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் முன்மொழியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அழைப்பை ஏற்று வருகை தந்த அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் அவர்களினால் நன்றியுரை வழங்கப்பட்டது.


.jpeg)

.jpeg)

.jpeg)





