மட்டக்களப்பு மருத்துவமனைகள் தொண்டு நண்பர்கள் அமைப்பு லண்டன் (FOBH - UK) நிறுவனத்தினால் நாவற்காடு வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதிக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு.









மட்டக்களப்பு வவுணதீவு, நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின்  வேண்டுகோளுக்கு இணங்க,  வைத்திய சாலையின் மகப்பேற்று விடுதியின் தேவைப்பாடாக காணப்பட்ட Cardio Topographic (CTG) மருத்துவ உபகரணத்தினை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் அவர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மருத்துவமனைகள் தொண்டு நண்பர்கள் அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி திருமதி காந்தா நிரஞ்சன்  அவர்களின் நிதி அனுசரணையில்    வழங்கி வைக்கப்பட்டது. 

நாவற்காடு பிரதேச வைத்தியசாலையானது எமது நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்ட வைத்தியசாலையாக காணப்படுவதுடன் குறித்த  வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி செயற்பாடுகள் கடந்த 1948ம்  ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன்  வைத்திய சாலையை சுற்றியுள்ள 8 கிராமங்களுக்கான நேரடி  மருத்துவ சேவைகளை நாவற்காடு பிரதேச வைத்தியசாலை வழங்கி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.