ஈரானிய ஆட்சியாளர்களினால் பலிஸ்டிக்
ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும்
தொழிற்சாலைகள் மற்றும் தொழில்சார் வலயங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய
பாதுகாப்புப் படைகள் இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக aljazeera
செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் நாடு முழுவதும் பரவியுள்ள ஆயுத உற்பத்தி நிலையங்கள் இஸ்ரேலிய விமானப்படையின் துல்லியமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
குறிப்பாக, இஸ்ரேலை அச்சுறுத்தக்கூடிய
பலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கும் கட்டமைப்புகளைச் செயலிழக்கச் செய்வதே
இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட
இந்தத் தாக்குதல்களின் போது, ஈரானிய ஆட்சியின் ஆயுத உற்பத்தித் தளங்கள்
மற்றும் ஏவுகணைத் தயாரிப்பு நிலையங்களை இஸ்ரேலிய இராணுவம் வெற்றிகரமாகத்
தாக்கியழித்துள்ளதாகவும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய
கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,
இஸ்ரேலின் இந்த அதிரடித் தாக்குதல் ஈரானின் இராணுவ பலத்திற்குப் பாரிய
பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





