மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.

 

 


 













 

 




























மட்டக்களப்பு வாழைச்சேனை  கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தில், புயலால் பாதிக்கப்பட்ட பூலாக்காடு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரம்படித்தீவு,அம்புஸ்குடா,வட்டிபோட்டமடு கிராமங்களைச்சேர்ந்த இடம்பேயர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 146 குடும்பங்களுக்கு மட்டக்களப்பு வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் பொருளாதார மேம்பாட்டு மையத்தின் நிதி அனுசரணையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவருமாகிய தேசபந்து முத்துக்குமார் செல்வராசா அவர்களது தலைமையில் குறித்த நிவாரணப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.