சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இருக்கும் போது செயற்பட்ட தொழிற்சங்கம் தற்போது இல்லை - ஈரோஸ் பிரபா ஆதங்கம்!!




சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இருக்கும் போது மலையகத்தில்  செயற்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் தற்போது இல்லையென மட்டக்களப்பில் இன்று (06) திகதி வொயிஸ் ஒஃப் மீடியாவில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜநாதன்பிரபாகரன் தனது ஆதங்கத்தினை தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால் இவர்கள் கைகட்டி நிற்க வேண்டி ஏற்படும். மலையக மக்கள் இன்று அட்டைக் கடிக்கு மத்தியில் தங்களது பங்கை செலுத்தி வருகின்றார்கள். இந்த இலங்கை தொழிலாளர்  காங்கிறஸ் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட அங்கத்தவர்களை கொண்டு இயங்கி வந்திருக்கின்றது. இவர்களது சந்தாப் பணத்தினை பெற்றே இன்று தொண்டமான் எனும் பரம்பரை இந்தியாவிலும் இலங்கையிலும் பல மில்லியன் செலவில் சொத்து குமித்து வைத்திருக்கின்றீர்கள்.

நீங்கள் இந்த தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு சந்தாவில் இருந்து 3 இல் ஒரு பங்கை தலா ஒருவருக்கு 3 இலட்சம் வழங்க வேண்டும். அப்படி நீங்கள் வழங்காவிட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் ஈரோஸ் போக வேண்டிய நிலை ஏற்படும். இதே போன்றுதான் ஏனைய தொழிற் சங்கங்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்றோரும் மூன்றில் ஒரு பங்கை வழங்க வேண்டும்.

அட்டைக் கடிக்கு மத்தியில் தமது இரத்தத்தை தாரைவார்த்து சந்தா செலுத்தும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இனியும் துரோகம் இளைக்க வேண்டாம்.

அதே போன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் வாழும் மக்களுக்காக வெளிநாடுகளில் இருந்து கஸ்டத்தின் மத்தியில் அனுப்பும் நிதிகள் இன்று இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்டோர் என்ன செய்கின்றார்கள் என எனக்கு தெரியும், இவர்களுக்கு எதிராகவும் நான் மனித உரிமை உள்ளிட்ட நீதி துறையிலும் சட்ட நடவடிக்கைக்கு சென்று வழக்கு தொடரவுள்ளேன்.

செந்தில் தொண்டமான் கிழக்கில் 500 கிலோ மக்கள் வரிப்பணத்தில் கஜு சாப்பிட்டிருக்கார். இவருக்கு எதிராகவும் விரைவில் சட்டம் பாயும். 

மட்டக்களப்பு மாநகர சபையால் சேகரிக்கப்பட்ட பொருட்களை இன்று சாணக்கியன் தனது நிதியில் வழங்கியதைப்போன்றும் படம் காட்டுகின்றார். 

தேசிய தலைவர் பிரபாகரனை நான் மதிக்கின்றேன். அவர் எமது மக்களுக்காக தனது குடும்பத்தை இழந்தவர். அவர் ஒரு தீர்க்கதரசி அதனால்தான் அவர் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கி சம்பந்தன் தலைமையில் அரசியல் கட்சியை உருவாக்கினார், அதனால்தான் தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களித்து வருகின்றனர்.
okey