உத்தரப்பிரதேச மாநிலம்
பாராபங்கி நகரில், போலி மருத்துவர் ஒருவர் போதையில் யூடியூப் காணொளிகளை
பார்த்தபடி அறுவை சிகிச்சை செய்ததால், பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதையின் காரணமாக, அவர் பெண்ணின் வயிற்றில் இருந்த பல்வேறு முக்கிய நரம்புகளைக் கத்தரித்து உள்ளார்.
இதனால் குறித்த பெண் பலத்த காயமடைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து, கணவர் உடனடியாக காவல்துறையில் முறைப்பாடு அளித்தார்.
காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டதோடு, உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலி
மருத்துவருக்கும் அவரது மருத்துவ நிலையத்துக்கும் எதிராக வழக்கு
தொடரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





