மலையக மக்களை வடகிழக்கில் குடியேற்ற ஈரோஸ் தயார் - இரா.பிரபா தெரிவிப்பு!!

மலையக மக்களை வடகிழக்கில் குடியேற்ற ஈரோஸ் கட்சி தயாராக உள்ளது என மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை பூராகவும் மக்களின் அவல ஓலம் கேட்டாலம், தற்போது நல்லதொரு அரசாங்கம் இருப்பதனால், உலக நாடுகள் முழுதும் எமது நாட்டிற்காக உதவ முன்வந்துள்ளதுடன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தமது உதவிகளை முன்வந்து வழங்க ஆரம்பித்துவிட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று பாராளுமன்றத்தில் என்ன சொல்கிறார். கடந்த முறை நூடில்ஸ் வேண்டிய காசி கொடுபடவில்லை என்று, இவருக்கு வெட்கமில்லையா இதை சொல்வதற்கு. ஈரோஸ்  வடகிழக்கு உள்ளிட்ட மலையக மக்களின் வறுமையினை போக்கியிருக்கின்றது.

செந்தில் தொண்டமான், ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் இந்த மலையக மக்களுக்கு எதனை செய்துள்ளார்கள். ஆனால் மலையக மக்களுக்கு பிரஜா உரிமையினை பெற்றுக் கொடுத்தது கூட ஈரோஸ்தான். இவர்கள் இந்த மக்களுக்கு ஒரு இராத்தல் பாண் கூட பெற்றுக் கொடுக்கவில்லை.

கிழக்கு மாகாண ஆளுனராக இருந்த செந்தில் தொண்டமான் 500 kg கஜு சாப்பிட்டுள்ளார். ஒரு கிலோ 6000/= ரூபாய் அப்படியானால், ஒரு வருடத்திற்கு எவ்வளவு செலவு செய்து கஜு சாப்பிட்டிருப்பார். இந்த பணத்தில் மலையக மக்களுக்கு பாண் வேண்டி கொடுத்திருக்கலாம்.

ஜனாதிபதி அனுர நல்லதொரு போராளி, நீங்களும் இந்த மலையக மக்களுக்கு துரோகம் செய்யாது. மலையக மக்கள் வாழ முடியாத இடங்களில் இருக்கின்றார்கள் அவர்களை நீங்கள் வடகிழக்கில் குடியேற்றலாம் அது தொடர்பில் அரசாங்கம் சிந்தியுங்கள்.

விடுதலை புலிகளின் தலைவர் உருவாக்கிய கட்சிதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆனால் இதில் இருந்த 16 பேரும் எதை எமது மக்களுக்கு செய்துள்ளார்கள்.

இன்று பார்த்தால் பிள்ளையான், டக்ளஸ் செய்ததை கூட இந்த தமிழ் அரசியல்வாதிகள் எதையும் செய்யவில்லை.

இந்தியாவிற்கு எதிராக கதைப்பதற்கு எவருக்கும் அறுகதையில்லை. இன்று ஒரு அனர்த்தம் ஏற்பட்டதும் முன்வந்து உதவியது இந்தியாதான். 

அரகல போராட்டம் நடக்கும் போது நாட்டை பொறுப்பெருக்க முன்வராதவர்கள், இன்று அனுர அரசை புடுங்க முயல்கின்றனர். நான் இன்று கூறுகின்றேன் 10 வருடங்களுக்கு இந்த அனுர அரசை யாராலும் புடுங்க முடியாது.

புலம்பெயர் சமூகம் மலையக மற்றும் வடகிழக்கு மக்களுக்கு  உதவி செய்ய விரும்பினால் எமது தொலைபேசி இலக்கமாகிய 0771433317  உடன் தொடர்பு கொண்டு உதவலாம்.

இந்தியா இன்று பாரிய உதவியை செய்து வருகின்றது. வடக்கு கிழக்கு, மலையக மக்கள் சார்பாக நன்றியினை தெரிவிக்கின்றோம்.