மட்டு ஆரையம்பதியில் இரண்டு மோட்டார்சைக்கிள் மோதி விபத்து. இருவர் வைத்தியசாலையில் அனுமதி.

 



மட்டக்களப்பு கல்முனை சாலையில் ஆரையம்பதி பிரதேசத்தில் நேற்றிரவு (6) இரண்டு மோட்டார்சைக்கிள் மோதியதில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார்சைக்கிள்களே ஆரையம்பதி மக்கள் வங்கி கிளைக்கு முன்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமுற்ற இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.