மட்டக்களப்பு வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் பொருளாதார மேம்பாட்டு மையத்தின் நிதி அனுசரணையில் நொச்சிமுனை ,இருதயபுரம் மத்தி ஆகிய இடங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 150 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவருமாகிய தேசபந்து முத்துக்குமார் செல்வராசா அவர்களது தலைமையில் குறித்த நிவாரணப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் அவர்களின் ஒழுங்கு படுத்துதலில் குறிப்பிட்ட உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .




