இலங்கைக்கு தற்காலிக பாலங்கள் அமைக்க தேவையான பொருட்களுடன் இந்திய விமானம் இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.

 

 





 

 

 

இந்தியாவின் மற்றொரு C-17 குளோப்மாஸ்டர் விமானம் நேற்று (04) இலங்கையின் வீதிப் போக்குவரத்தினை சீரமைக்கும் நோக்குடன் பெய்லி பாலம் அமைப்பதற்கான தொகுப்புடன் கொழும்பை வந்தடைந்துள்ளது. அதேபோல் பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட 25 அதிகாரிகளும் இவ்விமானத்தில் வருகை தந்துள்ளனர்.
இலங்கையில் வெள்ளத்தில் ஏற்கனவே உள்ள பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட அல்லது சேதமடைந்த இடங்களில் இந்த பாலத்தை சில மணிநேரங்களில் நிறுவ முடியும், இதனால் அத்தியாவசிய உதவிகளை ஏற்றிச் செல்லும் லாரிகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் எளிதாக மற்ற இடங்களை அடைய முடியும்.
அதேபோல புதன்கிழமை (03) C17 குளோப்மாஸ்டர் விமானம் பேரழிவைத் தொடர்ந்து துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கான சாலை இணைப்பை மீட்டெடுப்பதற்கான அவசரத் தேவையான, உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய பெய்லி பாலத்தை இலங்கைக்கு விமானத்தில் கொண்டு வந்திருந்தனர். அதேபோல் 500 நீர் சுத்திகரிப்பான்களும் எடுத்து வந்தனர், இத்துடன் பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உட்பட 22 பணியாளர்களையும் அந்த விமானம் கொண்டு வந்தது.
இதற்கிடையே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கும் பணிகளையும், மருத்துவ குழுவினர் தற்காலிக மருத்துவமனைகள் அமைத்து சிகிச்சைகள் அளிக்கும் பணிகளையும், NDRF வீரர்கள் மீட்பு மற்றும் புனரமைப்பு பணிகளையும் இன்றைய தினமும் தளராமல் தொடர்ந்து செய்து வருகின்றன.