முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015 இற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், ஜனாதிபதி செயலக வாகனங்களை கட்சி நடவடிக்கைக்கு பயன்படுத்தியமை குறித்து இவ்வாறு பிடியாணை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகேவினால் இன்றையதினம் (12) இவ்வாறு பிடியாணை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, 40 அரசாங்க வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 9 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.