RDHS BATTICALOA-NEWS
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து, #பட்டிப்பளை
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுச்
சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் பல்வேறு அத்தியாவசியத் திட்டங்கள்
மற்றும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்தோர்
முகாமைத்துவச் செயற்பாடுகள், எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு நோய்
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், அத்துடன் நடமாடும் மருத்துவச் சேவை வழங்கல்
போன்றன இதில் உள்ளடங்கும்.
வெள்ளம்
வடிந்த பகுதிகளில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவும் அபாயம்
உள்ளதால், அதனைத் தடுக்கும் நோக்கில் விசேட அறிவுறுத்தல் தொடர்ச்சியாக
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக வெள்ள நீர் தேங்கிய இடங்களில்
நடமாடும் மக்கள் மத்தியில், குறிப்பாக விவசாயிகள், சேற்று நிலங்களில்
பணிபுரிபவர்கள் மத்தியில் எலிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை
கொண்டுசெல்லப்டுகின்றது.
முற்காப்பு
நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை (Doxycyclineஅவசியம் பற்றியும் இதில்
அறிவுறுத்தப்படுகின்றது மேலும் காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை உளைவு,
மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால்
உடனடியாக மருத்துவ உதவியை நாடும் அவசியம் பற்றியும் வலியுறுத்தப்பட்டது.
அதேவேளை,
வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த
மக்களின் தேவைகளையும், முகாமின் சுகாதார நிலைமைகளையும் பேணுவதற்காக
முகாமைத்துவச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
#மகிழடித்தீவு
சரஸ்வதி வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் இடம்பெயர்ந்தோரின் அடிப்படைச்
சுகாதாரத் தேவைகள், சுத்தமான குடிநீர் மற்றும் சமைப்பதற்கான வசதிகள்,
கழிவகற்றல் முகாமைத்துவம், தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள்
என்பன முகாமில் உறுதி செய்யப்பட்டன. அத்துடன், முகாம்மில் இருந்தவர்களுக்கு
ஏற்பட்ட மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
வெள்ளத்திற்குப்
பிந்தைய சூழல் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்வதற்குச் சாதகமாக
இருப்பதால், டெங்குநோய் பரவலைத் தடுப்பதற்கான துரித கட்டுப்பாட்டு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
.
#பட்டிப்பளை
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமானது, வெள்ள அனர்த்தத்தின் பின்னான
சவால்களைத் திறம்படக் கையாள்வதில், தடுப்புச் செயற்பாடுகள் மற்றும் துரித
சிகிச்சைகள்ஆகிய இரண்டுக்கும் முன்னுரிமை அளித்துச் செயற்பட்டுள்ளது.











