இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாக பரவும் வதந்திகள் தவறானவை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மழை பெய்யும் வானிலை எதிர்பார்க்கப்படலாம் என்றாலும், குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்று வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ கூறினார்.





