கொழும்பு செட்டியார்தெருவின் இன்றைய தகவல்களின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 393000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 425000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை சுமார் USD 5,360 முதல் 5,380 டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இலங்கையிலும், உலக சந்தையிலும் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவிற்கு அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.





