இரண்டு மணிநேரம் ஒதுக்கி வீடுகளையும் சூழலையும் தூய்மைப்படுத்துங்கள் -மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கோரிக்கை
















மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் ஒவ்வொரு வீடும் சுற்றாடலும் தூய்மைபடுத்தும்   செயல் திட்டம்   முன்னெடுக்கப்பட்ட்து 
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம்  நொச்சிமுனை கிராம சேவையாளர் பிரிவுக்கு விஜயம் செய்து தூய்மைபடுத்தும்   செயல் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் .

பொதுமக்களால்  மேற்கொள்ளப்பட்ட  சிரமதான நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் அவர்களின் வழிகாட்டலின் கீழ்  நொச்சிமுனை கிராம சேவையாளர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது .
நாட்டில் ஏற்பட்ட பேரிடலிருந்து மீண்ட எமது கிராம வாழ் மக்களின் நலன் கருதி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இயற்கையின் சீற்றத்தில் இருந்து மீண்ட எமது மக்களின் இயல்பு வாழ்க்கையினை டெங்கு உயிர் கொல்லி காவு கொள்ள இடமளிக்காதபடிக்கு இச் சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.