மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி முன்னெடுப்பு

















சீரற்ற காலநிலை காரணமாக, "டித்வா" புயலின் தாக்கத்தினால்  நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிக்கரம் நீட்டும் நோக்கில் மண்முனைப்பற்று  பிரதேச செயலகத்தினால் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 மண்முனை பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கிளை ரீதியாகவும், செயலகப் பிரிவிற்குட்பட்ட   தாழங்குடா ஸீப்ரா விளையாட்டு கழகம் மற்றும் நலன்விரும்பிகளால் வழங்கப்பட்ட அத்தியாவசிய மற்றும் உலருணவு பொருட்கள் பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஸ் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திரு.S.பார்த்தீபன், பிரதித் திட்டமிடல்  பணிப்பாளர் திரு.A.சுதர்சன், நிருவாக உத்தியோகத்தர் திரு.V.தவேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டு கையளிக்கப்பட்டது. 

கையளிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும்  05.12.2025ஆம் திகதி  நேற்றைய தினம் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களால்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் அம்மணி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.