அனர்த்த பதிலளிப்புக்களுக்கான உபகரணங்கள் மட்டக்களப்பு மாவட்ட அர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளரினால் வழங்கி வைப்பு.

 

 


மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் அனர்த்த பதிலளிப்புக்களுக்கான உபகரணங்களை மாவட்ட அர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எம் எஸ் சியாத் நேற்று (01) புதிய மாவட்ட செயலகத்தில் வழங்கி வைத்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சினால் மாவட்டத்தின் அவசர அனர்த்த நிலைமைகளை கையாளுவதற்கான உபகரணங்கள் விசேட விமானம் மூலம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இவ் உபகரணங்கள் பிரதேச செயலகங்கள், பொலிசார், இராணுவத்தினர்களுக்கு புதிய மாவட்ட செயலகத்தில் வைத்து பதிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எம்.சுரேஸ்குமார் மாவட்ட அர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டார்.