டித்வா புயலின் கோர தாண்டவத்தினால் நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமைகளைக் கருத்திற்கொண்டு வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் சமூக மட்ட அமைப்புகள் பலவற்றினாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு புளியந்தீவு இளைஞர்கள் கடந்த மூன்று நாட்களாக சேகரித்த நிவாரணப் பொருட்களை முதற்கட்டமாக கதிரவெளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் மட்டக்களப்பு புளியந்தீவு இளைஞர்களால் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணிகள் ஆனைப்பந்தி ஆலய சந்தியில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது புளியந்தீவுப் பகுதி மக்கள், நகர்ப்புற மக்கள் உள்ளிட்ட பலதரபட்ட மக்களினால் மனப்பூர்வமாகப் பலதரப்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
குறித்த பொருட்கள் பொதி செய்யப்பட்டு 2025.12.05அன்று கதிரவெளி புதூர் பிரதேசத்தைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கு இளைஞர்களினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)



.jpeg)


.jpeg)


.jpeg)

.jpeg)







