மகப்பேற்று கிளினிக்குகளில்
பதிவுசெய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 5,000 ஊட்டச்சத்து
கொடுப்பனவு வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு
தெரிவித்துள்ளது.
நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நவம்பர் 30 ஆம் திகதி அல்லது
அதற்கு முன்னர் மகப்பேற்று கிளினிக்குகளில் பதிவுசெய்யப்பட்ட கர்ப்பிணித்
தாய்மார்களுக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





