நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.

 


இன்று மாலை 4 மணி நிலவரப்படி, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் , 350 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 
 
அத்தோடு, 51,765 குடும்பங்களைச் சேர்ந்த 188,974 பேர் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,347 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.