தற்போதைய நிலவரப்படி, நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 1,433 பாதுகாப்பு தங்குமிடங்களில், 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.





