மீனவர்கள் வீசிய வலையில் சிக்கி இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 2 டன் எடை கொண்ட ராட்சத புள்ளி சுறா.

 

 




 தமிழ் நாடு குமரி மாவட்டம் கீழ்மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் வீசிய கரைமடி வலையில் சிக்கி இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 2 டன் எடை கொண்ட ராட்சத புள்ளி சுறா.

குமரி மாவட்டம் கீழ்மிடாலம் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று காலை கடலுக்கு சென்று கரைமடி வலை வீசி மீன்பிடிக்க முயன்ற போது அவர்கள் வீசிய வலையினுள் ராட்சத சுறா மீன் ஒன்று சிக்கி உள்ளது இதனைக் கண்ட மீனவர்கள் அந்த சுறாவை வெளியேற்றி விட முயன்று வலையை அறுத்துள்ளனர். இதனால் சுறா கடலுக்குள் சென்றிருக்கும் என நினைத்த மீனவர்கள் வீடுகளுக்கு திரும்பி சென்ற சிறிது நேரத்தில் அந்த பகுதியில் சுறா மீன் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது இந்த சுறா சுமார் 10 அடி நீளமூம் 2 டன் எடையும் இருப்பது தெரியவந்தது மேலும் அந்த சுறா இறந்து இருப்பதும் தெரியவந்தது இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு களியல் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வரும் சூழலில் கடற்கரை பகுதியில் ராட்சத சுறா மீன் கரை ஒதுங்கி இருப்பது குறித்த தகவல் காட்டு தீ போல் பரவியதை தொடர்ந்து அந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கடற்கரை பகுதிக்கு வந்து இறந்த நிலையில் கிடக்கும் சுறா மீனை பார்த்து செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து சென்று வருகின்றனர். தொடர்ந்து வனத்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த இறந்த சுறா மீனை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தி குழிதோண்டி புதைக்க உள்ளனர்.