நாட்டின் சில பகுதிகளில் இன்று (2) பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 



வளிமண்டலவியல் திணைக்களத்தால் சற்றுமுன்னர் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, 

 வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் . ஊவா, வட மத்திய, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேல், மத்திய, சபரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

 இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் கோரத்தால் ஏற்பட்ட பெரும் பாதிப்பைக் கருத்தில்கொண்டு மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.