இலங்கையின் முதலாவது ஓய்வு பூங்கா பேர்ல் பே (Pearl Bay).

 

 



 ஐரோப்பிய தரநிலைகளிற்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது ஓய்வு பூங்காவான பேர்ல் பே (Pearl Bay) ஆனது, குழு சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பெருநிறுவன குடும்ப உல்லாசப் பயணங்களில் நிலையான அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.அத்துடன் இந்த பொழுதுபோக்கு இடமானது பெரும் குழுக்களை ஈர்த்த நிலையில் இதற்கான பிரத்தியேக முன்பதிவுகளும்அதிகரித்து வருகின்றன. 

23 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பல செயல்பாடுகள் சார்ந்த பொழுதுபோக்கு ஸ்தலமாக திகழும் பேர்ல் பே பூங்காவானது குடும்பங்கள் மற்றும்பெருநிறுவன குழுக்கள் என இரு சாராருக்கும் ஈடுபாடு, மற்றும் மறக்கமுடியாத அனுபவங்களை ஏற்படுத்தும் வகையில் வேடிக்கை மற்றும் உற்சாகத்தை மேம்படுத்தும் ஒரு இடமாக நற்பெயரைப் பெற்று வருகிறது. 

“இலங்கையின் பொருளாதாரமானது மீண்டு வரும் நிலையில் மேலும் இந்த ஸ்திரத்தன்மையானது சமூகக் கூட்டங்கள் மற்றும் நிறுவன நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளுக்கான சூழலையும் வளர்க்கிறது,” என்று டேவிட் பீரிஸ் லீஷர் (பிரைவேட்) லிமிடெட்டின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. கிரிப்சன் ஹப்புகொட்டுவ கருத்து தெரிவித்தார். 

“இலங்கையர்கள் தமது வாழ்க்கைத் தரத்தை மீண்டும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு மேம்படுத்த விரும்புவதை நாம் காண்கிறோம், மேலும் அவர்கள் பொழுதுபோக்குக்கான ஈடுபாட்டுடன் கூடிய, உற்சாகமான இடங்களைத் தேடுகிறார்கள்.