அம்பாறை
மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம்
காரணமாக கிட்டங்கி - நாவிதன்வெளி மற்றும் மண்டூர்- வெல்லாவெளி பாதைகள்
முற்றாக மூடப்பட்டுள்ளன.
அதேவேளை காரைதீவு - அம்பாறை பிரதான வீதி பொலிஸாரின் கண்காணிப்பில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போக்குவரத்து நடைபெறுகிறது.
மேலும் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன்,வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.
குறிப்பாக
காரைதீவு அம்பாறை பிரதான வீதியில் காரைதீவு மற்றும் வளத்தாப்பிட்டி
பிரதேசத்தில் வெள்ளம் வீதிக்கு குறுக்காக பாய்வதால் போக்குவரத்து
பாதிக்கப்பட்டுள்ளது.
நீத்தையாறு
அருகே சாகாம வீதியிலுள்ள மதகு (Causeway) இனூடாக 2 அடி அளவான வெள்ள நீர்
வடிந்தோடுவதனால் அவ்வழியில் பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்கப்
பட்டுள்ளது.
அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, தைக்கா நகர் ,
அக்கரைப்பற்று, நிந்தவூர்,காரைதீவு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை ,
நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப்
பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.
மாவட்டத்தில்
தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப் பிரதேசங்கள்,
வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை
மக்கள் பாதுகாப்பான முறையில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதை
உறுதிப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொலிஸ் திணைக்களத்தைக்
கேட்டுள்ளது
( வி.ரி.சகாதேவராஜா)






.jpg)







