தென்கிழக்கு
ஆசியா பல்கலைக்கழகமும் ஆங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து சிறப்பிக்கும்
சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடார வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு
கொண்டாட்ட கடாரம் கொண்டான் சிறப்பு மாநாடு (1024 -2025) நேற்று
சனிக்கிழமையும் (22) இன்று ஞாயிற்றுக்கிழமையும்(23) கம்போடியா நாட்டின்
அங்கோர் மாநில சியிம்ரீப் நகரில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில்
உலகமுழுவதிலுமுள்ள 15க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் ஆயிரம்
தமிழறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பங்கேற்று அற்புதமான படைப்புகளை
படைத்து கொண்டிருக்கின்றனர்.
இலங்கையிலிருந்து 15 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த
மாநாட்டில் ஒழுங்கமைப்பாளர், கம்போடியா நாட்டின் தமிழ்சங்க தலைவர்
ஸ்ரீனிவாச ராவ்வின் சிறப்பாக அழைப்பின் கீழ் கொழும்பு ஏர் டிரான்ஸ்
ட்ராவல்ஸ் உரிமையாளர் தனுகரனின் ஒழுங்கமைப்பில் கீழ் இலங்கையில் இருந்து 15
பேர் பங்கேற்றனர்.
காரைதீவைச்
சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி செல்வி தயாபரன் விதுர்ஷிகா
"தேவராஜ வழிபாடு" தென்கிழக்காசியாவை மையப்படுத்திய உரையை 15 நிமிடங்கள்
சிறப்பாக நிகழ்த்தினார். இவரது உரை பலரது கவனத்தையும் ஈர்த்தது.
"சோழர்களுக்கும்
கருவூர் சித்தர்களுக்குமான தொடர்பை" பற்றி சிறப்புரையை சித்தர்கள் குரல்
அமைப்பின் ஆஸ்தான தலைவர் சிவசங்கர் ஜீ நிகழ்த்தினார்.
சித்தர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன் மற்றும் துணைத்தலைவர் மனோகரன் உள்ளிட்ட 15 பேராளர்கள் பங்குபற்றிஉள்ளனர்.
( வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா)









