அரச நடன விருது விழா -2025 சாதனை படைத்த மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ நடேச நர்த்தனாலய மாணவிகள் .


    





 

 

 


புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு -  கலாசார அலுவல்கள் திணைக்களம் , இலங்கை கலைக்கழகம்,  அரச நடன மற்றும் நாட்டிய  நாடகக் குழு   ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 2025 ஆம் ஆண்டுக்கான அரச நடன விருது வழங்கும் விழா புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களின் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்தில் நடைபெற்றது.   
 

குறித்த அரச நடன விருதுக்கான  போட்டிகள் வவுனியாவில் இடம் பெற்றது 
 

 மட்டக்களப்பு அமிர்தகழி    ஸ்ரீ   நடேச   நர்த்தனாலய  மாணவிகள்  தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றி  (கிராமிய நடனம் (குழு) -மயில் நடனம்  (வயது 08-12) ) தேசிய மட்டத்தில்  மூன்றாம்  இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்கள் .

மட்டக்களப்பு அமிர்தகழி    ஸ்ரீ  நடேச   நர்த்தனாலய பொறுப்பாசிரியர்  திருமதி பவித்திரா  சுரேந்திரன்   தேசிய மட்ட போட்டியில்  பங்கு பற்றி (   திறந்த பிரிவு வயதெல்லை 30க்கு மேல் 4.1சாஸ்திரிய நடனம் தனி ஆண் பெண்- 4.1. கௌத்துவம் ) தேசிய மட்டத்தில் 2-ம் இடம் பெற்று பெற்று  மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் .


அரசநடன விருது விழா 2025இல் தேசிய மட்டத்தில் சாதனை    புரிந்த  ஸ்ரீ  நடேச   நர்த்தனாலய மாணவிகளை    பயிற்றுவித்து நெறிப்படுத்தியவர் நடன ஆசிரியையும்,    மட்டக்களப்பு அமிர்தகழி    ஸ்ரீ  நடேச   நர்த்தனாலய நடனப் பயிற்சி நிலையத்தின்  பணிப்பாளர்  திருமதி பவித்திரா  சுரேந்திரன் என்பது குறிப்பிட்ட தக்கது .