மட்டு கிரான்குளத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மண்முனைப்பற்று பிரதேச மாணவ மாணவிகளைக் கெளரவிக்கும் நிகழ்வு,

 

 

 


 


































கதிரவன் குழுமத்தினரால்  5ம் தர புலமைப்  பரிசில்  பரீட்சையில் சித்தி  பெற்ற மண்முனைப்பற்று பிரதேச மாணவ மாணவிகளைக் கெளரவிக்கும்  நிகழ்வு,  அமெரிக்க நாட்டின்  புதிய சந்தர்ப்பங்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி  சுபத்ரா  சுந்தரலிங்கம்   அவர்களின் முன்னிலையில்   கதிரவன் இன்பராசா அவர்களின் தலைமையில்  கிரான்குளம் "SEE  MOON HOTEL" இல்   நடைபெற்றது.
  விழாவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ஞா.ஶ்ரீநேசன் பிரதம அதிதியாகவும் ,சிறப்பு அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளர் செந்தில்நாதன் அவர்களும் கௌரவ அதிதிகளாக மண்முனை பற்று கோட்ட கல்வி பணிப்பாளர்  C.தில்லைநாதன் மற்றும்  வடக்கு கிழக்கு புதிய சந்தர்ப்பங்கள் அமைப்பின்  திட்ட பணிப்பாளர் சா .சுதாகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
நிகழ்வில் 77 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்  
மண்முனைப்பற்று கல்விக்கோட்ட அதிபர்கள் , ஆசிரியர்கள் ,பொது மக்கள் நலம் விரும்பிகள் மற்றும்  பிரதேசவாழ் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள் .