மட் பட் உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான மெய் வல்லுனர் திறனாய்வு போட்டிகள் மிக சிறப்பாக இடம் பெற்றது













பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த சனிக்கிழமை பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு கோகுல்ராஜ் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது ..

பிரதம விருந்தினராக பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருவாளர் எஸ் ஸ்ரீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும் நிகழ்வுகள் யாவும் இரண்டு முப்பது மணி அளவில் ஆரம்பம் ஆனதுடன் இதில் அதிதிகள் பேண்ட் இசைவாதியத்துடன் வரவழைக்கப்பட்டடு மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் போட்டி நிகழ்ச்சிகள் ஆரம்பமானது,    இதன் போது பிரதம விருந்தினரான வலயக் கல்வி பணிப்பாளர் தனது உரையில் மட் உதயபுரம் தமிழ் வித்யாலயம் தற்போது சிறந்த வளர்ச்சியை அடைந்து வருகிறது என்பதற்கு இந்த இல்ல விளையாட்டுப் போட்டி சான்றாக உள்ளது எனக் கூறியதுடன் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் ஊடாக வலய மற்றும் தேசிய மட்ட போட்டிகளுக்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டும் என கூறியதுடன் தற்போது பாடசாலையானது  பெறுபேறுகளின் அடிப்படையிலும் பௌதீக வளத்திலும் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது எனகூறியதுடன் அதிபர் அவர்களை வெகுவாக பாராட்டினார் மேலும் இல்ல தரிசிப்பிலும் ஈடுபட்டு ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

 கங்கா ஜமுனா காவேரி ஆகிய இல்லங்கள் போட்டி இட்டதுடன் காவேரி இல்லம் 397 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது அத்துடன் பல வருடங்களாக நடைபெறாமல் இருந்த இல்ல விளையாட்டுப் போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு பிரதான அனுசரணையாளர்களாக செயல்பட்ட சந்திரகாந்தி பவுண்டேஷன் யூகே மற்றும் கொக்குவில் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் யுகே கை கொடுக்கும் கரங்கள் அமைப்பு என்பவற்றிற்கு பாடசாலை அதிபர் நன்றிகளை தெரிவித்ததுடன் பிரதான அனுசரணையின் செயற்பாட்டாளரான திரு.ஏ.பிரபாகரன் யுகே அவர்களுக்கு வலய கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர் நிர்வாக குழு நன்றிகளை தெரிவித்துக் கொண்டமை விசேட அம்சமாகும்