மட்டக்களப்பில் மூச்சுப் பயிற்சி – ஆரோக்கியமான சமூகத்திற்கான ஒரு முயற்சி














மட்டக்களப்பு, கல்லடி சரவண வீதியில் அமைந்துள்ள ஏற்றம் உளவியல் மையத்தில்,   கடந்த வாரம்     மூச்சுப் பயிற்சி அறிமுக நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த பயிற்சிகளை நடத்துவதற்காக பிராந்திய சுகாதார சேவைகள் (RDHS) கட்டிடத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முயற்சியை வாழ்க்கை மேம்பாட்டு பயிற்றுவிப்பாளர் நளினி ரத்னா ராஜா முன்னெடுத்து வருகிறார். “கனவு மெய்ப்படுகின்றது” திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு சமூகக் குழுக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்த மூச்சுப் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

மூச்சு என்பது உடல், மனம், உணர்வுகள் மற்றும் நரம்பு மண்டலத்தை இணைக்கும் ஒரு முக்கியமான சக்தியாகும். சரியான மூச்சுப் பயிற்சிகள் இதயத் துடிப்பை சமநிலைப்படுத்தி, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் எளிய மற்றும் பயனுள்ள முறையாகும். இதன் முக்கியத்துவம் குறித்து சித்தர்கள், புத்தர், விவேகானந்தர், திருமூலர் போன்ற பல அறிஞர்கள் தொன்ம காலத்திலிருந்தே வலியுறுத்தி வந்துள்ளனர்.

இந்த மூச்சுப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறும்.  மேலும், தினசரி மூச்சுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், காலை 5.30 மணி மற்றும் இரவு 9.00 மணிக்கு WhatsApp ஆன்லைன் அமர்வுகளும் நடத்தப்படுகின்றன.

ஆரோக்கியமான, அமைதியான மற்றும் நிறைவான மனதுடன் சமூகத்தை உருவாக்கும் இந்த முயற்சியில் அனைவரும் இணைந்து பயன்பெற அழைக்கப்படுகிறார்கள். நான் ஒரு முக்கியமான நபர் விசேடமானவர் என்று நம்பும் யாரும் தற்கொலைக்கு துணிய மாட்டார்கள்