உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இன்று 'பராபவ' தமிழ்ப் புத்தாண்டை
உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், அதற்கான சுப நேரங்கள்
மற்றும் ஆசார முறைகள் குறித்த விபரங்கள் பஞ்சாங்கங்களின் அடிப்படையில்
வெளியிடப்பட்டுள்ளன.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி: இன்று காலை 08:40 க்கு புத்தாண்டு பிறக்கிறது.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி: இன்று முற்பகல் 09:32 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.
புத்தாண்டு
தினமான இன்று அதிகாலை 04:40 முதல் நண்பகல் 12:40 வரை மருத்து நீர் வைத்து
நீராடுவதற்கு (ஸ்நானம் செய்ய) மிகவும் உகந்த நேரமாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரான மற்றும் பின்னரான நடுநிலை நேரமான புண்ணிய காலம்:
நேற்று
இரவு 08:57 க்குத் தொடங்கி, இன்று முற்பகல் 09:45 வரை நீடிக்கிறது. இந்த
நேரத்தில் ஆலய தரிசனம் மற்றும் தான தர்மங்களில் ஈடுபடுவது சிறப்பு.
இன்று காலை 08:47 முதல் 09:04 வரையிலான காலப்பகுதி கைவிசேடம் பரிமாறிக் கொள்வதற்கு உகந்த நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தாண்டுக்கான மங்களகரமான ஆடையாக சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த ஆடையை அணியப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.





