மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று 17/4/2026 ஆம் தேதி மனநலம் மற்றும் உளச்சமூக நலன் தொடர்பான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில், உளநல பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் டான் செளந்தரராஜா ஒருக்கிணைப்புடன் நடைபெற்றது. இதில் கல்வி திணைக்கள ஆலோசனை வழி காட்டல் உத்தியோகத்தர்கள் , சிறைச்சாலை உத்தியாகத்தர்கள், குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் திருத்தல நிலையங்களில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், மேலாளர்கள், பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நோக்கமானது
மனநல திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல்
மக்களிடையே அதிகரித்து வரும் உளச்சமூக சுமைகளை கருத்தில் கொண்டு, அவர்களின் நலனை மேம்படுத்துவதற்கும்நடத்தை மற்றும் உணர்ச்சி தொடர்பான சவால்களை திறம்பட சமாளிப்பதற்கும் தேவையான நடைமுறை, திறன்களை வழங்குவதோடுமட்டுமல்லாமல்,
தண்டனை இல்லாத நடத்தை மேலாண்மை, சிந்தனை மற்றும் கற்றல் திறன் மேம்பாடு, தொடர்பு திறன்கள் வளர்ச்சி மற்றும் தொழில் வழிகாட்டுதல் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன.
இந் நிகழ்ச்சி, சமூக நல சேவைகள் வழங்கும் பணியாளர்களின் திறன்களை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பான மற்றும் ஆதரவான பராமரிப்பு சூழலை உருவாக்குவதற்கும் முக்கியமான ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.


.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)



.jpeg)
.jpeg)

.jpeg)





