கல்முனை ஆதார வைத்தியசாலை சிறுவர் விடுதியில் உள்ள விசேட தேவை உடைய குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள்.

 






















ஐக்கிய நாடுகள் சிறுவர் தினத்தையொட்டி கல்முனை  ஆதார வைத்திய சாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த விசேட தேவை உடைய குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

 இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் சுகுணன் குணசிங்கம்  தலைமையில் இடம்பெற்றது.
 இந்நிகழ்வினை கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் ரொசாந்த்துடைய ஏற்பாட்டில் இடம் பெற்றது. 

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் நௌபீன்  அவர்களும், வைத்தியர்கள், தாதிய பரிபாலகர், நிர்வாக உத்தியோகத்தர், தாதிய உத்தியோகத்தர்கள், பேச்சுப் பயிற்சியாளர், இயன் மருத்துவ நிபுணர், மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 இந்நிகழ்விற்கான அனுசரணையினை அனலிட்டிக்கல் இன்ஸ்ட்ருமென்ட் பிரைவேட் லிமிடெட் வழங்கியிருந்தது. இந்நிறுவனத்தின் பிரதிநிதியாக நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர்  கலையரசன்  கலந்து சிறப்பித்திருந்தார்.
 
 
 ( வி.ரி.சகாதேவராஜா)