மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறிகள்.







    மட்டக்களப்பு  மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும்  உத்தியோகத்தர்களுக்கு   உற்பத்தித்திறன் செயற்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சி நெறிகள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2025.11.26 ஆந் திகதி பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலில்  நிருவாக உத்தியோகத்தர் திரு.வே. தவேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு வளவாளர்களாக திரு. R.புவனேந்திரன், மாவட்ட இணைப்பாளர், உற்பத்தி திறன் பிரிவு, மாவட்ட செயலகம், மட்டக்களப்பு அவர்களும்,  மற்றும் திருமதி.சரண்யா லவப்பிரதாபன், திட்ட முகாமையாளர், Esoft நிறுவகம்,  மட்டக்களப்பு, அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இப்பயிற்சி நெறிகளினூடாக உத்தியோகத்தர்களுகள் அலுவலக கடமைகளை இலகுவாகவும்,  வினைத்திறனாகவும் மேற்கொள்வது தொடர்பான தெளிவூட்டலை  பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.