நவம்பர் 27, 28, 29 திகதிகளில் நடை பெற இருந்த க.பொ.த. உயர் தர பரீட்சைகள் டிசம்பர் 07, 08, 09 திகதிகளில் நடைபெறும் -பரீட்சைகள் ஆணையாளர்

 


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த. உயர் தர பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த A/L பரீட்சைகள் நடைபெறாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இப்பரீட்சைகளுக்கான மாற்றுத் தினங்களாக டிசம்பர் மாதம் 07, 08 மற்றும் 09 ஆகிய தினங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று (27) நடைபெறவிருந்த பாடப் பரீட்சை – டிசம்பர் 07 ஆம் திகதியும், நாளை (28) நடைபெறவிருந்த பாடப் பரீட்சை – டிசம்பர் 08 ஆம் திகதியும், சனிக்கிழமை (29) நடைபெறவிருந்த பாடப் பரீட்சை – டிசம்பர் 09 ஆம் திகதியும் நடைபெறும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஊடாக அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.