பேராதனை பல்கலைக்கழகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

 


நிலைமை மோசமடைந்து வருவதால், பேராதனை பல்கலைக்கழகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வளாகம் முழுவதும் பாதுகாப்பு தயார்நிலைக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். சகல விடுதிகளிலுமுள்ள மாணவர்களும் பாதுகாப்பாகவும் தொடர்ச்சியான கண்காணிப்பிலும் இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.


சீரற்ற காலநிலையின் காரணமாக மகாவலி ஆற்றில் நிரம்பி வழியும் வெள்ளம், ரோயல் தாவரவியல் பூங்காவின் சில பகுதிகள் உட்பட பல தாழ்வான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது.


வெள்ளம் தொடர்ந்து உயரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.