காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கில் இருந்து வடக்காக மட்டக்களப்பை தாண்டி நகர்ந்துள்ளது

 

 


 காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தெற்கில் இருந்து வடக்காக மட்டக்களப்பை தாண்டி நகர்ந்துள்ளது..... இதனால் வாகரை, கதிரவெளி, பொலநறுவை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று வீசி வருகின்றது. அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களின் தென் பகுதிகள் காற்றின் வேகம் குறைந்து மழை குறைந்துகொண்டு வருகின்றது... திருகோணமலை, வவுனியா, புத்தளம் மற்றும் கொழும்பு மாவட்டங்களில் மழையுடனான காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் சனிக்கிழமையுடன் சீரான காலநிலை நிலவக்கூடும்.