சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வெப்ப அழுத்தத்தினால் பாதிக்கப்படும் அபாயம்.

 


வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வெப்ப அழுத்தத்தினால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனடிப்படையில், பொதுமக்கள் முடிந்தவரை நீர் அல்லது பொருத்தமான திரவ ஆகாரங்களை அருந்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரண, கொழும்பு தேசிய மருத்துவமனையின், மருத்துவர் ருவன் ஜயசூரிய மற்றும் கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா ஆகியோர் இதனை விளக்கினர்.

இதேவேளை, இன்றைய தினம் மேல், சபரகமுவ, தென், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் (Heat Index) உயர் மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.