போக்குவரத்து பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மட்டக்களப்பு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.














மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு  ஆரையம்பதி பிரதேச தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில்  மூழ்கியுள்ளது.

வவுணதீவு பிரதேச - வலையறவு  பிரதான பாலத்தின் மேலாக வெள்ள நீர் பரவி வருகின்றதால் மக்கள் போக்குவரத்து  தொடர்ச்சியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும் சில தாழ் நிலங்களில் உள்ள வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள    தோடு  கொக்கட்டிச்சோலை பிரதேசத்திற்கு செல்லும் பிரதான மண்முனை பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால்  போக்குவரத்து  பாதிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.

மேலும் சில தாழ் நிலங்களில் உள்ள வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன் தினம் தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு  ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு வீதிகள் மற்றும்,  சிகரம் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வடிகாண்கள் உடனான வீதி கட்டமைப்பு ஆரையம்பதி பிரதேச சபைக்குட்பட்ட சில பகுதிகளில் இன்மையினாலேயே தாம் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து வீதிகளை  புனரமைத்து தருவதுடன் வடிகாண் கட்டமைப்பையும் செய்துதருமாறு ஆரையம்பதி பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.