பாடசாலை விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்துவதாகக் கூறி மூன்றாம் வகுப்பில் கல்வி பயிலும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியரைக் கைது செய்ய விசேட காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை தலைமையக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
கலேவெல கல்வி வலயத்திற்கு உட்பட்ட
தம்புள்ளை பிரிவில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் மாணவர்களுக்குக்
கற்பிக்கும் ஆசிரியரை கைது செய்யவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (24) சிறுமியின்
பெற்றோர், சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தம்புள்ளை
காவல்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு
அளித்திருந்தனர்.
குறித்த ஆசிரியர் பாடசாலை விடுமுறை நாட்களில், பாடசாலையில் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துவதாகவும், அதற்காக வந்த சிறுவர்களில் ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சந்தேக நபரான ஆசிரியரின்
தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் மனைவியின் தொலைபேசியும்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.





