விபத்தில் சிக்கி கிழக்கு பல்கலைக்கழக வைத்தியபீட மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

 







கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இடம்பெற்ற சோகமான விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த வைத்தியபீட மாணவன் ஒருவர் பலியானார்.
இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில், ஓட்டமாவடியைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நான்காம் வருட மாணவர் முஹம்மத் மஸூத் (23) உயிரிழந்துள்ளார்.
விபத்து நேரத்தில் அவர் பல்கலைக்கழகத்திலிருந்து ஓட்டமாவடி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார் என்பது தெரிவிக்கப்படுகிறது.
23 வயதுடைய இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன், மீராவோடையை பிறப்பிடமாகவும் ஓட்டமாவடி மர்கஸ் பள்ளிவாயல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது சடலம் தற்போது மாவடிவேம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.