மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய நான்கு காவல்துறை குழுக்கள் .

 




மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய நான்கு காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்படவிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. 
 
குறித்த பெயர்ப்பலகைகள், வாழைச்சேனை பிரதேச சபையின் அங்கீகாரம் இல்லாமல் நிறுவப்பட்டதாகக் கூறி, அவை அகற்றப்பட்டிருந்தன. 
 
இது தொடர்பில், 7 பேர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது. 
 
இதேநேரம், மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
முன்னதாக, குடும்பிமலை, கல்லடி வெட்டை, பெண்டுகள் சேனை, முருங்கன் தீவு, முறுத்தானை ஆகிய இடங்களிலிருந்தே தொல்லியல் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டிருந்தன.